கேள்வி பதில் பக்கம்

ஸோலார் குறித்த வினா விடை: Click here for English

எத்தனை வகையான ஸோலார் மின் அமைப்புகள் உள்ளன ?

இரண்டு விதமான ஸோலார் மின்அமைப்புகள் உள்ளன.

  • On Grid (Battery இருக்காது)
  • Off-Grid (Battery இருக்கும்)
On Grid System:

On Grid  மின்அமைப்புகளில் Batteryகள் இருக்காது.
ஸோலார் panelகள் உற்பத்தி செய்யும் DC பவர் ,  INVERTER மூலமாக AC பவராக மற்றப்பட்டு EB மெயின் லைனுடன் இணைக்கப்பட்டு விடும்.
இவ்வகை ஸோலார் மின்அமைப்புகள் மின்வெட்டு சமயங்களில் வேலை செய்யாது .எனவே இதை Backup Power ஆக உபோயோகிக்க முடியாது.
அரசு மானியம் இத்தகைய On grid மின்அமைப்புகளுக்கு மட்டும் தான் கிடைக்கும்.

Off Grid System:

Off Grid  மின்அமைப்புகளில் Batteryகள் இருக்கும்.

இவ்வகை ஸோலார் மின்அமைப்புகளை Backup Power ஆக உபயோகிக்க முடியும்.

அரசு மானியம் இத்தகைய அமைப்புகளுக்கு கிடையாது.

On Grid மின்அமைப்புகள் ஏன் மின்வெட்டு சமயங்களில் வேலை செய்வது இல்லை ?

OnGriDsystem-Pic Credtlighthousesolardotcom

நல்ல கேள்வி இது. இதை புரிந்துகொள்ள முதலில் On grid அமைப்பு எப்படி வேலை செய்கிறது என்பதைப் பார்ப்போம்.
மேலே உள்ள படத்தில் காட்டியபடி ஸோலார் தகடுகள் கூரையில் அமைக்கப்பட்டிருக்கும். இந்த தகடுகளின் மீது சூரிய ஒளி விழும்போது மின்சாரம் உற்பத்தி ஆகிறது. ஆனால் இது DC எனப்படும் நேர்மின்சாரமாகும்.(Direct Current).

ஆனால் நமது வீட்டில் இருக்கும் Fan, TV Fridge போன்ற கருவிகள் AC (Alternating Current)ல் தான் வேலை செய்யும். எனவே ஸோலார் அமைப்பிலிருந்து வரும் DCஐ INVERTER எனும் கருவி AC ஆக மாற்றுக்கிறது. இந்த INVERTERஇல் இருந்து வரும் AC current, EB மெயின் லைனுடன், மீட்டர் பாக்ஸ்ல் இணைக்கப்பட்டு விடும்.
ஆக இந்த அமைப்பு ஒரு சிறிய மின் உற்பத்தி நிலயம் போலவே செயல்படுகிறது.
இதனால் இதில் இருந்து வரும் வோல்டேஜ் மற்றும் Frequency,EBல் இருந்து வரும் வோல்டேஜ்,Frequency போலவே இருத்தல் அவசியம்.
அதாவது EB வோல்டேஜ் 200 Volts ஆக இருந்தால் Solarலிருந்து வரும் வோல்டேஜ்ம் 200 Volts ஆக
இருக்க வேண்டும்.

இந்த ஒருங்கிணைக்கும் (synchronization) பணியை INVERTER செய்கிறது.

இப்போது EB power நின்று விட்டால் என்ன ஆகும் ? INVERTERக்கு எவ்வளவு வோல்டேஜ் உற்பத்தி செய்யவேண்டும் என்று தெரியாது. ஆகவே அது OFF ஆகிவிடுகிறது.

இதைத் தவிர இன்னும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
EB லயன் மேன், Transformerஐ பழுது பார்ப்பதற்காக மின் இணைப்பைத் துண்டித்தால், அந்த மாதிரி சமயங்களில் , Solarல் இருந்தும் மின்சாரம் lineக்குப் போகக்கூடாது. இல்லை என்றால்
மின் தொழிலாளிக்கு Shock அடித்துவிடும்.
ஆகவே பாதுகாப்பு கருதியும் EB power இல்லாத போது ஸோலார் பவர் OFF ஆகி விடும்.

On Grid ஸோலார் அமைப்புகள் மின்வெட்டு சமயங்களில் வேலை செய்வது இல்லையென்றால் , அவற்றால் என்ன பயன் ? ஏன் இத்தகய அமைப்புகளை நிறுவ வேண்டும் ?

சுருக்கமான பதில் : “பணம் சேமிப்பதற்காக”..
ஆம்..உதாரணத்திற்கு ஒரு 1 KW On Grid மின் அமைப்பு, Net-Metering  உதவியால் ஒரு Electricity Billக்கு ரூ:1,500 வரை மிச்சப்படுத்தும்.
இந்த அமைப்புகள் 25 ஆண்டுகள் வரை மின்சாரம் உற்பத்தி செய்யும் திறம் உள்ளவை. எந்தவித பாராமரிப்பும் தேவை இல்லை.
புகை விடாது, சப்தம் இடாது, இயற்கையோடு இணைந்து செயல் படுவதால், சுற்றுச்சூழலை மிகவும் பாதுகாக்கிறது.
எனவே தான், அரசு இது போன்ற On Grid Solar மின் அமைப்புகளுக்கு ரூ:50,000/- வரை மானியம் தந்து ஊக்குவிக்கின்றது..

On Grid ஸோலார் அமைப்புகளின் நிறை / குறைகள் யாவை ?

நிறைகள்:

குறைகள்:

On Grid ஸோலார் மின் அமைப்புகளில் Batteryகள் இல்லாததால், பராமரிப்பு என்பது தேவையே இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை batteryக்களை மாற்றும் அவசியமும் இல்லை.
இதனால் On Grid மின் அமைப்புகளின் விலை குறைவு.

மின்வெட்டுககளின் போது வேலை செய்யாது.பகல் நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டால்சூரிய ஒளி இருந்தும் உபயோகமில்லாமல் வீணே போய்விடுகிறது.

உற்பத்தி ஆகும் current , EB mainsஇலேயே connect ஆகிவிடுவதால், வீட்டில் FAN, TV  போன்ற எந்த உபகரணங்களும் ON செய்யப்படாமல் இருந்தாலும் பணத்த்தை மிச்சப்படுத்த உதவுகிறது.

On Grid மின்அமைப்புகள் நிறுவ EB இடம் அனுமதி (Approval) வாங்கவேண்டியுள்ளது. 

வீடுகளுக்கு Off Grid மின்அமைப்புகள் நிறுவ ஏன் பரிந்துரைக்கப்படுவதில்லை?
Off Grid மின்அமைப்புகளுக்கு தமிழக அரசு மானியம் (Under CIS) கிடையாது .

இவ்வகை மின் அமைப்புகள் Batteryகள் உபயோகப்படுத்தப்படுவதால் , பராமரிப்பு செலவு அதிகம்.

Batteryகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மற்ற வேண்டிய தேவை இருக்கும்.

இதனால் Off Grid மின்அமைப்புகள் On Grid மின்அமைப்புகளைக்காட்டிலும் விலை அதிகம்.

Off Grid மின் அமைப்புகள் சாதாரணமாக வீட்டில் இருக்கும் எல்லா கருவிகளுடனும் (உதாரணம்: AC,FRIDGE,MIXIE etc) இணைக்கபட்டிருக்காது. ஒரு சில குறிப்பிட்ட உபகரணங்களுடன் மட்டுமே (உதாரணம்: 4 Tube Light, 2 Fan , 1 TV etc) இணைக்கப்பட்டிருக்கும். இந்த உபகரணங்களை பகலில் பயன் படுத்தவில்லை என்றால், சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் மின்சாரம் Batteryஐ charge செய்ய மட்டுமே பயன்படும். Battery முதல் நாளே முழுவதுமாக charge ஆகிவிட்டிருந்தால், இப்போது generate ஆகும் சூரிய மின்சக்தி வீண் ஆகி விடுகிறது.
எனவே Off Grid அமைப்புக்களின் செயல் திறன்(efficiency) சற்று குறைவு,அத்தோடு சிக்கனமானவையும் அல்ல (not economical).
இதனால் தான் Off Grid அமைப்புகள் வீடுகளுக்குப் பரிந்துரைக்கப்படுவதில்லை.

Off Grid ஸோலார் அமைப்புகளின் நிறை / குறைகள் யாவை ?
off-gridsystempiccrdtsiliconsolar

நிறைகள்:

குறைகள்:

Off Grid அமைப்புகள் வேலை செய்ய EB Power இருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே Off Grid Solar அமைப்புகள் மின்வெட்டு சமயங்களில் Backup Power ஆக ,பயன்படுகின்றன.

Batteryகள் பயன்படுத்தப்படுவதால் பராமரிப்பு செலவு, விலை அதிகம்.

EB அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.

வீட்டில் உள்ள எல்லா உபகரணங்களையும் இணைக்க முடியாததால் செயல் திறன் (efficiency) குறைவு.

Service-Battery
Battery-Terminals1

 

நெட் மீட்டரிங் என்றால் என்ன ?

வீட்டில் இருக்கும் EB மீட்டர் ஒரு வழியிலேய தான் இயங்கும். அதாவது நாம் எவ்வளவு current , EB line இலிருந்து எடுத்திருக்கிறோம் என்பதை மட்டுமே காட்டும்.

What-is-Net-Metering-graphic-with-border

ஆனால் ஸோலார் நெட் மீட்டர் என்பது இரு வழிகளில் (bi-directional) செயல்படும்.
நாம் எவ்வளவு current EB line இலிருந்து எடுத்திருக்கிறோம் என்பதை மட்டுமல்லாது, நாம் வீட்டிலிருந்து EB lineக்கு எவ்வளவு current அனுப்பி இருக்கிறோம் என்பதையும் காட்டும்.

இந்த இரண்டு readingsக்கும் உள்ள வித்தியாசாத்திற்கு தான் நமக்கு BILL வரும்.

உதாரணமாக ஒரு மாதத்தில் நாம் 500 Units EBஇலிருந்து எடுத்திருக்கிறோம்(import), 200 Units Solar மூலமாக EBக்கு அனுப்பி இருக்கிறோம்(export) என்றால், 500 – 200 = 300 Unitsக்கு மட்டும் தான் BILL போடப்படும்.
ஒருவேளை நாம் எடுப்பதை விட அனுப்பி இருப்பது அதிகமாக இருந்தால் , நமக்கு credit கொடுத்துவிடுவார்கள். இதை ஒரு வருடம் வரை carry over பண்ணலாம்.
இந்த NET-METERING இருப்பதால் தான் On Grid Solar மின் அமைப்புகள் மிகவும் வரவேற்க தக்க திட்டமாக உள்ளது.

இந்த net meterஐ EBஇடம் இருந்து சுமார் ரூ:6,000 செலுத்தி வாங்க வேண்டும்.

Accelerated Depreciation என்றால்என்ன ?

வீடுகளில் ஸோலார் போடுபவர்களுக்கு மட்டும் தான் அரசு வழங்கும் மானியம் கிடைக்கும்.
மற்ற, Office,Company களுக்காக போடப்படும் ஸோலார் திட்டங்களுக்கு மானியம் கிடையாது.
இந்த குறையை போக்குவதற்காக அரசு Accelerated Depreciation திட்டத்தை கொண்டுவந்து உள்ளது.
இத்திட்டத்தின்படி, லாபம் சம்பாதிக்கும் Companyகள் ஸோலார் திட்டத்திற்காக செலவு செய்த தொகையில் 80% ,முதல் வருடத்திலேயே தேய்மானமாக (DEPRECIATION) காட்டி அதற்கு வருமான வரியிலிருந்து விலக்கு பெறமுடியும்.

மேலும் விவரங்களுக்கு உங்களது Accountantஐ இந்த siteஐ பார்க்கச் சொல்லவும்:

Roof Top Solar Benefits – Accelerated Depreciation – Slideshare presentation

Understanding Accelerated Depreciation in Solar Projects

Roof Top Solar Power Plant நிறுவ எவ்வளவு இடம் தேவை ?

சூரிய தகடுகளை (Solar Panels) நிறுவ தெற்கு பார்த்த, நிழல் விழாத இடம் தேவை.

நிழல் விழாத இடத்தைத் தேர்ந்தெடுப்பது தான் மிகவும் முக்கியம்.

தகடுகளின் மேல் விழும் நிழல் , அவை உற்பத்தி செய்யும் மின்சாரத்தின்
அளவை கணிசமாகக் குறைத்துவிடும். மேலும், தகடுகளில் உள்ள சோலார் செல்களையும் நாளடைவில் பழுதாக்கிவிடும்.

சமதளமான RCC தரை மிகவும் உகந்ததாகும்.

கீழுள்ள structure வலுவாக இருக்கும் பட்சத்தில் சாய்வான Asbestos கூரைகளிலும் அமைக்கலாம்.

ஒரு 1 KW திறன் கொண்ட Solar Plant அமைப்பதற்கு நிழல் விழாத 100 முதல் 120 சதுர அடி இடம் இருந்தால் போதுமானது.


Roof Top Solar Power Plant நிறுவ அரசு மான்யம் (subsidy) கிடைக்குமா ?

தமிழகத்தைப் பொறுத்தவரையில் CIS எனப்படும், Cash Incentive Scheme மூலமாக முதல் 10,000 அமைப்புகளுக்கு ரூ: 50,000 (தமிழக அரசு:ரூ20,000 , மத்திய அரசு (MNRE) ரூ: 30,000) வரை மானியம் வழங்கப்படுகிறது.

இதற்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன.

1. வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கு மட்டுமே (EB Tariff LA1A) இது கிடைக்கும்.

2. தமிழக அரசு அமைப்பான TEDA (Tamil Nadu Energy Development Agency) அநுமதி வழங்கியுள்ள சில குறிப்பிட்ட நிறுவனங்கள் (Empanelled Vendors) மூலமாக அமைக்கப்படும் Solar Plantகளுக்கு மட்டும் தான் மானியம் கிடைக்கும்.

3. On Grid எனும் வகையைச் சார்ந்த , (Battery இல்லாத) சோலார் அமைப்புகளுக்கு மட்டும் தான் மானியம் கிடைக்கும்.

4. On Grid சோலார் அமைப்புகளின் திறன் 1 Kw, 2 Kw, 5 Kw, 10 Kw இவற்றுள் ஒன்றாக இருக்க வேண்டும்.

5. அதிகபட்சமாக ரூ:50,000 வரை மானியம் கிடைக்கும்.

இந்த CIS திட்டம் வீடுகளுக்குப் போடப்படும் ஸோலார் அமைப்புகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதால், மற்ற வகை நுகர்வோர்களுக்காக (Commercial Tariff Users),
மத்திய அரசு Accelerated Depreciation எனும் வருமன வரிச் சலுகையை அளித்துவருகிறது.

ஒரு 1KW On Grid மின் அமைப்பின் விலை சுமார் ரூ: 1 லட்சம் முதல் ரூ:1.2 லட்சம் வரை இருக்கும்.மானியம் போக ரூ: 50 ஆயிரத்திலிருந்து ரூ: 70 ஆயிரம் வரை ஆகும்.
விவரங்களுக்கு எங்களை Contact செய்யவும்.

வீட்டில் ஏற்கெனவே இருக்கும் Solar அல்லாத Inverterகளை Solar மூலம் இயங்கச் செய்ய முடியுமா ?

தொழில் நுட்ப ரீதியாக பார்க்கும் பொழுது (technically)இவ்வாறு சோலார் அல்லாத Inverterகளை சோலார் மூலமாக இயங்கச் செய்ய முடியும்.
ஆனால் இத்தகைய அமைப்புகள் வீடுகளுக்கு பெரும்பாலும் பரிந்துரைக்கப் படுவது இல்லை. ஏனென்றால் இது போன்ற அமைப்புகள் அதிக விலை ஆகும், மற்றும் மின் கட்டணத்தில் பெரிய அளவு சேமிக்க முடியாது.