நீங்கள் ஏன் சூரிய மின் சக்திக்கு மாற வேண்டும்?

img4

அண்மையில் சென்னை மாநகரின் பெரும்பாலான இடங்களை மூழ்கடித்த வெள்ளம், தொடரப் போகும் இதுபோன்ற இயற்கை இடர்பாடுகளுக்கான ஒரு எச்சரிக்கையாகும்.

இம்மாதிரியான இயற்கை பேரழிவுகளுக்கு, கடல் மற்றும் பூமியின் வெப்ப நிலை அதிகரிப்பதே காரணம் என நிபுணர்களால் தெரிவிக்கப்படுகிறது. இதுவே உலக வெப்ப மயமாதல் (Global Warming) என அழைக்கப்படுகிறது.காற்றில் அதிகரித்து வரும் கார்பன் டை ஆக்ஸைட் மற்றும் இதர வாயுக்களே இந்த வெப்ப மயமாதலுக்கு காரணம் என விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

நமது வீட்டு கூரையின் மீது சூரிய மின் திட்டம் அமைப்பதன் மூலம் , உலக வெப்ப மயமாதலை கட்டுபடுத்தவும் குறைக்கவும் அடுத்த தலை முறைக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தவும் நாமும் நம்மால் முடிந்த அளவு உதவலாம்.

ஒரு கிலோ வாட் சூரிய மின் சக்தித் திட்டம் (Solar PV Plant), ஒரு நாளில் சுமார் 4 யூனிட் (kwh) சக்தியை உற்பத்தி செய்யும் திறனுடையது.

இந்தியாவில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 300 நாட்கள் வெயில் காலமாக உள்ளது.

எனவே ஒரு கிலோ வாட் திட்டத்தால் ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ 1200 யூனிட் (1200 kwh) மின் சக்தியை உற்பத்தி செய்ய இயலும்.

சூரிய மின் திட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு கிலோ வாட் மின் சக்தியாலும் 0.72 kg கார்பன் டை ஆக்ஸைட் பரவலை தடுக்க இயலும் என கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது ஒரு கிலோ வாட் சூரிய மின் சக்தித் திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 864kg(1200×0.72) கார்பன் டை ஆக்ஸைட் பரவலை தடுக்க இயலும்.

இது ஏறக்குறைய ஒரு டன்னுக்கு நிகராகும்! இது உங்கள் கூரையின் மீது ,எவ்வித பராமரிப்பு செலவுமின்றி 20 மரங்களை வளர்ப்பதற்கு நிகராகும்!

பசுமையை நோக்கி செல்ல இதுவே சரியான தருணம்! சூரிய மின் சக்திக்கு மாறுங்கள்!

சூரிய மின் சக்தி தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கும், திட்டங்கள் மற்றும் செலவின தொடர்பான விபரங்களையும் அறிய எங்கள் இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்!

Click here